The following blog entry is compliments of Pastor Leon Hiebert, Community Care Pastor of Generations Church, Andover, KS. Pastor Leon sends his S.O.A.P. out via email to many people with whom he regularly corresponds. The top S.O.A.P. is his original post; the bottom is the same S.O.A.P., transcribed into the Indian language by a pastor and friend of Pastor Leon’s who acted as translator when he was on a mission trip to India a few years back. The Indian transcription was sent throughout India and potentially reached and was read by millions of saved and unsaved in India. Pretty cool, huh?
Scripture: 2 Chronicles 2:27 The sons of Ram the firstborn of Jerahmeel: Maaz, Jamin and Eker. 28 The sons of Onam: Shammai and Jada. The sons of Shammai: Nadab and Abishur.
Observation: These verses are the middle two of a chapter full of hard-to-pronounce names. And this chapter is both preceded and followed by similar chapters. I may not be able to pronounce these names, but God has no trouble. These names might not be important to me, but they are to God! I may not be acquainted with the people named here, but God knows them perfectly.
Application: And so it is with me. Others may not know or be able to pronounce my name, but not God! Others may not even be aware that I exist, but not God! He knows my name! He knows me! And as he was careful to have these names included in the Bible, he is careful to have my name recorded in heaven. When I was born into His family by receiving Jesus’ as both my Savior and my Lord, He wrote my name in the Book of Life. (NOTE: Philippians 4:3; Revelation 3:5; 13:8; 17:8; 20:12&15; 21:27; 22:19 These verses give the importance of my name being written there—and it not being removed!)
Prayer: Thank you, Lord, for saving my soul. Thank you, Lord, for making me whole. Thank you, Lord for giving to me, Thy great salvation so full and free. Amen. And thank you, Lord for writing my name in the Book of Life! Amen!
1சாமுவேல் 13, 1 நாளாகமம் 2,3; 2கொரிந்தியர் 12
பெயர்கள்
Scripture வேத வசனம் : 1நாளாகமம் 2:27 யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
28. ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள்.
Observation கவனித்தல் : இந்த வசனங்கள் உச்சரிக்க கடினமான பெயர்களைக் கொண்ட ஒரு அதிகாரத்தின் நடுவில் உள்ளன இந்த அதிகாரத்தின் முன்னும் பின்னும் வரும் அதிகாரங்களும் இதே போன்றே உள்ளன. இந்தப் பெயர்களை என்னால் உச்சரிக்க இயலாது போகலாம், ஆனால் தேவனுக்கு உச்சரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை . இந்தப் பெயர்கள் எனக்கு முக்கியமானவைகளாக இல்லாதிருக்கலாம், ஆனால் தேவனுக்கு அவை முக்கியமானவை! இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்களுடன் எனக்கு பரிச்சயமில்லாதிருக்கலாம். ஆனால் தேவன் அவர்களை மிகவும் நன்றாக சரியாக அறிந்திருக்கிறார்.
Application பயன்பாடு : இவ்வாறாக என்னைக் குறித்தும் கூட தேவன் அறிந்திருக்கிறார். மற்றவர்கள் என்னையோ அல்லது என் பெயரை உச்சரிக்கவோ அறியாதிருக்கலாம். ஆனால் தேவன் அறிந்திருக்கிறார். நான் இருப்பதைக் குறித்து கூட மற்றவர்கள் அறியாதிருக்கலாம், ஆனால் தேவன் அறிந்திருக்கிறார். அவர் என் பெயரை அறிந்திருக்கிறார். என்னை அறிந்திருக்கிறார். இந்தப் பெயர்கள் வேதாகமத்தில் சேர்க்கப்படுவதற்கு அவர் அக்கறையுள்ளவராக இருந்தது போல, என் பெயர் பரலோகத்தில் பதிவுசெய்யப்படுவதற்கும் கரிசனையுள்ளவராக இருக்கிறார். எனது ஆண்டவராகவும் எனது இரட்சகராகவும் இயேசுவை ஏற்றுக் கொண்டு நான் அவருடைய குடும்பத்தில் பிறந்த போது, அவர் எனது பெயரை ஜீவ புத்தகத்தில் எழுதினார். (கவனிக்க: பிலிப்பியர் 4:3; வெளிப்படுத்தல் 3:5; 13:8; 17:8; 20:12&15; 21:27; 22:19 எனது பெயர் அங்கு எழுதப்படுவதற்கான முக்கியத்துவத்தையும், அதிலிருந்து என் பெயர் கிறுக்கிப் போடாமலிருக்கப்படவேண்டும் என்பதையும் இவ்வசனங்கள் கூறுகின்றன)
Prayer ஜெபம் : என்னை இரட்சித்ததற்காக நன்றி கர்த்தாவே. என்னை பூரணமாக்கியதற்காக நன்றி ஆண்டவரே. கர்த்தாவே, உமது பெரிய இரட்சிப்பை எனக்கு முழுமையாகவும் இலவசமாகவும் தந்ததற்காக நன்றி . ஆமென். மேலும் எனது பெயரை ஜீவ புத்தகத்தில் எழுதியதற்காகவும் நன்றி! ஆமென்